ப.வேலூர் பகுதியில் 4 டவுன் பஞ்சாயத்துக்களில் வெற்றி பெற்ற கணவன்-மனைவி, அண்ணன்-தங்கை
பரமத்திவேலூர் தாலுக்காவில் உள்ள 4 டவுன் பஞ்சாயத்துக்களில் கணவன் மனைவி, அண்ணன் தங்கை வெற்றி பெற்றுள்ளனர்.;
வெங்கரை டவுன் பஞ்சாயத்து :
நாமக்கல் மாவட்டம் வெங்கரை டவுன் பஞ்சாயத்தில் நடைபெற்ற, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் அதிமுக 8 வார்டுகளில் வெற்றி பெற்றது. இதில் 10-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயகுமார் வெற்றி பெற்றார். அதே டவுன் பஞ்சாயத்தில் 15-வது வார்டில் விஜயகுமாரின் மனைவி நித்யகுமாரி அதிமுக சார்பில் போட்டியிட்டு, அவரும் பெற்றி பெற்றார்.
பரமத்தி, பொத்தனூர் டவுன் பஞ்சாயத்துக்கள்:
பரமத்தி டவுன் பஞ்சாயத்து, 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் புவனேஸ்வரியும், 12-வது வார்டில் போட்டியிட்ட அவரது கணவரும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
பொத்தனூர் டவுன் பஞ்சாயத்து, 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் விஜயாவும், 10-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அவரது கணவர் கருணாநிதியும் வெற்றிபெற்றனர். ஏற்கனவே பாண்டமங்கலம் டவுன் பஞ்சாயத்தில், 15வது வார்டு திமுக வேட்பாளரர் சோமசேகரும், 10-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட அவரது மனைவி சுகந்தியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பொத்தனூர் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 6-வது வார்டில் தி.மு.க சார்பில் வைரமணி வெற்றி பெற்றார். அவரது தங்கை ராஜாம்பாள் அதே டவுன் பஞ்சாயத்து 14வது வார்டில் போடியிட்டு வெற்றி பெற்றார்.