பரமத்தி அருகே டாஸ்மாக் மதுபானக்கடையில் திருட்டு: போலீசார் விசாரணை

பரமத்தி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-07-12 02:45 GMT

பரமத்தி அருகே ரூ.1000 திருட்டுப்போன மதுபானக்கடையில் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே, கீரம்பூரில் அரசு மதுபான கடை (டாஸ்மாக்) செயல்பட்டு வருகிறது . இந்தக் கடையின் சூப்பர்வைசராக தமிழ்செல்வன் (48), விற்பனையாளராக சண்முகம் (46) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு 2 பேரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.

அடுத்தநாள் காலை வந்து பார்த்தபோது, மதுபானக்கடையின் முன்பகுதியில்,  ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு இருந்தது. தகவலின் பேரில் பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கடை சூப்பர்வைசர், விற்பனையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், அங்கு மது பாட்டில்கள் எதுவும் திருடப்படவில்லை. அதேவேளையில் பணம் வைக்கும் லாக்கரை உடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது மட்டும் தெரியவந்தது. லாக்கர் உடைக்க முடியாததால் மேசைக்குள் வைத்திருந்த சில்லரை நோட்டுகள் ரூ. ஆயிரத்தை மட்டும் மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்றவர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News