நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ப.வேலூரில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-12-03 02:30 GMT

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, பரமத்திவேலூரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் காமராஜர் சிலை அருகில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் தங்கராரஜ் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.

குழந்தைகள், மாணவிகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுத்திட வேண்டும், நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும், புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், மதனா, மதனா, ஜெயராம், லோகேஷ்வரன், அன்பரசன், பிரேம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News