ப.வேலூர் அருகே மாணவர் விஷம் குடித்து தற்கொலை

பரமத்தி வேலூர் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2022-03-23 03:00 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பெரியகர சப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவரது மகன் கவின் (21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியல் மயக்கவியல் துறை 4 ஆண்டு படிப்பை, இரண்டு ஆண்டுகளில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

இதனால், விரக்தியில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவின், பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News