ப.வேலூரில் திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிசேகம்

Update: 2022-04-25 02:30 GMT

ப.வேலூர் திருஞானசம்பந்தர் மடத்தில், திருவோண நட்சத்தித்தை முன்னிட்டு, ஸ்ரீ நடராஜர் சுவாமிக்கு வெள்ளிக்கவச அலங்காரம் நடைபெற்றது.

ப.வேலூரில் சித்திரை மாத திருவேண நட்சத்திரத்தில் ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. பரமத்திவேலூர் பேட்டையில் திருஞானசம்பந்தர் மடம் உள்ளது. இங்கு சித்திரை மாத திருவோண நட்சத்திரத்திரத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிவகாமசுந்தரி உடனமர் நடராஜ பெருமானுக்கு காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் ஸ்ரீ நடராஜர் வெள்ளிக்கவச அலங்காரத்திலும், சிவகாமசுந்தரி அம்பாள் தங்ககவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News