ப.வேலூர் அருகே தீ விபத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்பு வைக்கோல் நாசம்
ப.வேலூர் அருகே தீ விபத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் நாசமானது.;
பரமத்தி வேலூர் அருகே செங்கப்பள்ளி கிராமத்தில் அரசமரம் உள்ளது. இந்த மரத்தின் அருகில் குவிந்து கிடந்த குப்பைகளை சிலர் தீவைத்து எரித்தனர். இந்த தீ காற்றில் பரவி, அருகில் இருந்த அரசமரத்திலும் பற்றி எரிந்தது. இதைப்பார்த்த அங்கிருந்தோர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், மரம் பெருமளவு எரிந்து சேதமானது.
பாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி புக்கரான்டி (55). இவர் தனது வீட்டில் கால்நடைகளுக்காக ரூ.60 ஆயிரம் மதிப்பிலான வைக்கோலை வீட்டின் அருகே கால்நடை தீவனத்திற்காக போர் வைத்திருந்தார். அரச மரம் அருகில் இருந்து பரவிய தீ, வைக்கோல் போரில் தீப்பற்றி எரிந்தது. அதை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. இதனால், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து நாசமானது. தகவலறிந்து வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்து பரவாமல் தடுத்தனர்.