பரமத்தியில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறப்பு விழா

பரமத்தியில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் கட்டபட்டுள்ள, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.;

Update: 2022-04-23 11:00 GMT

பரமத்தி ஒருங்கிணைந்த கோர்ட் திறப்பு விழாவில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் குத்துவிளக்கேற்றி வைத்தார். அருகில் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் மற்றும் நீதிபதிகள்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி பை-பாஸ் ரோட்டில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரமணா கலந்துகொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த கோர்ட்டை திறந்து வைத்தார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து பரமத்தி கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன், மாவட்ட கலெக்டர் ஸ்யோசிங், தலைமை குற்றவியல் நீதிபதி சரவணன், பரமத்தி சார்பு நீதிபதி பிரபாகரன், மாஜிஸ்திரேட் பழனிக்குமார், உரிமையியல் கோர்ட் நீதிபதி பிரியா உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். திரளான வக்கீல்கள் மற்றும் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News