மோகனூர் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மோகனூர் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.;

Update: 2021-10-23 23:15 GMT

மோகனூர் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.

மோகனூர் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகள் போன்றவற்றை அகற்றி அரசு நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி வருவாய்த்துறைஅலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இந்த நிலையில், மோகனூர் அருகில் உள்ள மணப்பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராமநாயக்கன்பாளையம் பகுதியில், அரசுக்கு சொந்தமான நிலத்தில் தனியார் கடை கட்டியிருப்பதாக, மோகனூர் தாசில்தாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து தாசில்தார் தங்கராஜ் தலைமையில், வி.ஏ.ஓ.க்கள் அன்புராஜ், பரமேஸ்வரி உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஜேசிபி இயந்திரம் மூலம், ஆக்கிரமிப்பில் இருந்த கடையை இடித்து அகற்றி அரசுக்கு சொந்தமான நிலத்தைக் கைப்பற்றினார்கள்.

Tags:    

Similar News