பரமத்திவேலூரில் பொது மருத்துவ முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை
பரமத்திவேலூரில் பொது மருத்துவ முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்தி வேலூரில் அரசின் சார்பில் இலச மருத்துவ முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பரமத்தி வேலூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் டவுன் பஞ்சாயத்திற்க்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரை விட தனியார் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.
பருவநிலை மாறுபாட்டால் காய்ச்சல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கொசுக்களின் உற்பத்தியை தடுக்க டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தி பொதுமக்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.