சோழசிராமணி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
சோழசிராமணி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.;
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, சோழசிராமணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை 8ம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மின் விநியோகம் தடைசெய்யப்படும்.
இதனால், சோழசிராமணி, சுள்ளிபாளையம், சக்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.