பரமத்தி அருகே கோழிப்பண்ணை தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே கோழிப்பண்ணையில் வேலை பார்த்து கொண்டிருந்த கூலித்தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே கோழிப்பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், குலோத்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் சத்யராஜ் (34). இவரது மனைவி சித்ரா (32). இவர்கள் இருவரும் குடும்பத்துடன் பரமத்தி அருகே காரைக்கால் பகுதியில், ஒரு தனியாருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் தங்கி கடந்து 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை சத்யராஜ் கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்றார். அப்போது அவர் பண்ணையில் திடீரென மயக்கி விழுந்தார். இதைப் பார்த்த சக தொழிலாளர்கள், அவரை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.