கார் மோதியதி'ல் நடந்து சென்ற பெண் உயிரிழப்பு
Road Car Accident - கந்தம்பாளையம் அருகே மணியனூரில் கார் மோதியதால் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.;
Road Car Accident -கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி செல்லம்மாள் (55). இவர்களுடைய மகளை மணியனூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் செல்லம்மாள் மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது மணியனூர் பஸ் ஸ்டாப் அருகே மெயின் ரோட்டை கடக்க முயன்றபோது திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி அண்ணா நகரை சேர்ந்த ஜேம்ஸ் அலெக்ஸ்சாண்டர் (31) என்பவர் ஓட்டி வந்த கார் செல்லம்மாள் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2