கட்சி செயல் திட்டம் குறித்து அதிமுகவினருடன் தங்கமணி ஆலோசனை
பாண்டமங்கத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் செயல் திட்டம் குறித்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆலோசனை மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா, கபிலர்மலை தெற்கு ஒன்றிய அதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பாண்டமங்கலத்தில் நடைபெற்றது.
கபிலர்மலை தெற்கு ஒன்றிய செயலாளர், பரமத்தி வேலூர் எம்எல்ஏ சேகர் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத் தலைவர் ரவி, மாவட்ட ஆவின் தலைவர் ராஜேந்திரன், பாண்டமங்கலம் நகர அதிமுக செயலாளர் செல்வராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெங்கரை நகர செயலாளர் ரவீந்தர் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது சட்டசபை தேர்தல் சிறப்பாக பணியில் ஈடுபட்ட அதிமுகவினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், கட்சியின் செயல் திட்டங்கள், பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் பொத்தனூர், வேலூர், பரமத்தி நகர அதிமுக செயலாளர்கள் நாராயணன், வேலுசாமி, வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.