மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம்: ப.வேலூர் எம்எல்ஏ வழங்கல்
கபிலர்மலையில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ சேகர் வழங்கினார்.;
கபிலர்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பரமத்திவேலூர் எம்எல்ஏ சேகர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் ,பரமத்திவேலூர் கபிலர்மலை சமுதாயக் கூடத்தில் மாற்று திறனாளிகளுக்கான கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் அனைவரையும் வரவேற்றார். பரமத்தி வேலூர் எம்எல்ஏ சேகர் விழாவில் கலந்துகொண்டு, 125 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.