தேசிய ஒற்றுமை நாள் பேரணிக்கு பரமத்தி வேலூர் போலீசார் வரவேற்பு

குமரி முதல் குஜராத் செல்லும் தேசிய ஒற்றுமை நாள் பேரணிக்கு பரமத்தி வேலூர் போலீசார் வரவேற்பு அளித்தனர்.;

Update: 2021-10-17 02:45 GMT

பரமத்தி வேலூர் வந்த சிறப்பு காவல் படையினரின் பேரணிக்கு, போலீஸ் டிஎஸ்பி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினமான (அக். 31) தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டு, கன்னியாகுமாரியில் இருந்து குஜராத்துக்கு தமிழக சிறப்புக் காவல் படை போலீசார் பேரணியாக செல்கின்றனர். பரமத்தி வேலூர் வந்த அவர்களுக்கு காவிரி பாலம் அருகில்  போலீஸ் டிஎஸ்பி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்து இன்றைய இந்தியாவை உருவாக்கியவர் சர்தார் வல்லபபாய் படேல். அவரது பிறந்த நாள் அக்டோபர் 31 ஆம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்தியாவின் 4 திசைகளில் இருந்தும் சிறப்புக் காவல் படை போலீசார் டூ வீலர்களில் ஊர்வலமாக புறப்பட்டு வரும் 24 ஆம் தேதி குஜராத் மாநிலம் நர்மதை நதிக்கரையில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலை நிறுவப்பட்டுள்ள இடத்தை சென்றடைகின்றனர்.

தமிழ்நாடு சிறப்பு காவல்டை சார்பில், கன்னியாகுமரியில் இருந்து ஏடிஎஸ்பி குமார் தலைமையில், 25 போலீசார், கடந்த 15ம் தேதி டூ வீலர்களில் புறப்பட்டனர். அவர்கள் நேற்று, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காவிரி பாலத்தை வந்தடைந்தனைர். அவர்களக்கு பரமத்திவேலூர் போலீஸ் டிஎஸ்பி ராஜாரணவீரன் தலைமையில் போலீசார் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதே போல் வடக்கே ஜம்மு காஷ்மீரில் இருந்தும், கிழக்கே திரிபுராவில் இருந்தும், மேற்கே குஜராத்தில் இருந்தும் சிறப்பு காவல்படை போலீசார் ஊர்வலமாக புறப்பட்டு 24 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள வல்லபபாய் படேல் சிலை நிறுவப்பட்டுள்ள இடத்தை வந்தடைகின்றனர். அக்டோபர் 31 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் தேசிய ஒற்றுமை நாள் விழாவில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை போகலீசார் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News