பரமத்தி வேலூர் வேளாண் மார்க்கெட்டில் ரூ. 21.42 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூர் தேசிய வேளாண் சந்தையில் ரூ.21.42 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வெங்கமேட்டில் தேசிய எலக்ட்ரானிக் வேளாண்மை மார்க்கெட் உள்ளது. இங்கு கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 22 ஆயிரத்து 618 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ.64.99-க்கும், சராசரியாக ரூ.84.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.17 லட்சத்து 75 ஆயிரத்து 152-க்கு விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 26 ஆயிரத்து 862 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.83.45-க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.19-க்கும், சராசரியாக ரூ.83.19-க்கும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்து 921 மதிப்பில் தேங்காய் பருப்பு மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.