பரமத்தி வேலூர் அருகே மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு: போலீஸ் விசாரணை
பரமத்தி வேலூர் அருகே மூதாட்டியிடம் தங்க செயின் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையம், மன்னாந் தோட்டத்தை சேர்ந்தவர் தங்கவேல். டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அருக்காணி (60). இவர் சம்பவத்தன்று அதிகாலை பால்காரரிடம் பால் ஊற்றி விட்டு கேனை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்மநபர் ஒருவர், வீட்டின் முன்பு மின்இணைப்பை துண்டித்தார்.
பின்னர் இருட்டில் நின்று கொண்டு இருந்த அருக்காணி கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் எடையுள்ள தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்.
இது குறித்து புகாரின் பேரில் ப.வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்ம ந பரை வலைவீசி தேடி வருகின்றனர்.