பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பரமத்திவேலூர் தாலுக்கா, பாண்டமங்கலத்தில் பிரசித்திபெற்ற மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.
விழாவில் அம்மன் தினசரி சிங்க வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம் மற்றும் காளை வாகனங்களில் அம்மன் திருவீதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து, தேர் இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக தேரோடம் நடைபெற்று நிலை வந்தடைந்தது. நாளை புதன்கிழமை பொங்கல், மா விளக்கு பூஜை மற்றும் வியாழக்கிழமை கிடா வெட்டுதலும், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடைபெறும். 28-ந் தேதி இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.