ப.வேலூர் வல்லப விநாயகர் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா
நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் வல்லப விநாயகர் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள வல்லப விநாயகர் கோயிலில், கன்னிமூல கணபதி, பானலிங்க விஸ்வேஸ்வரர், விசாலாட்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர், மகா கால பைரவர் மற்றும் நவக்கிரக சன்னதிகளின் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. தற்போது மண்டல அபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். மேலும் கங்கை, யமுனை சரஸ்வதி மற்றும் கோதாவரி உள்ளிட்ட நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு புனித நீரைக் கொண்டு யாக சாலை பூஜை மற்றும் 108 வலம்பரி சங்காபிசேகம் நடைபெற்றது. இரவு வானவேடிக்கையும், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வல்லப விநாயகர் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தினர்.