ஜேடர்பாளையம் அருகில் காவிரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

ஜேடர்பாளையம் அருகில் காவிரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.;

Update: 2022-08-31 08:13 GMT

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள ஜமீன் இளம்பள்ளி அருகே, காவிரி ஆற்றில் ஒரு வாலிபரின் உடல் தண்ணீரில் மிதந்தது. இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை செய்ததில், ஆற்றில் மூழ்கி பலியான வாலிபர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈருடையான்பட்டு மாதாகோவில் தெருவை சேர்ந்த மதலைமுத்து மகன் பெனிட்டோ போஸ்கோ (26) என்பதும், அவர் ஜேடர்பாளையத்துக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு வந்தபோது, காவிரி ஆற்றில் மூழ்கி பலியானதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News