பரமத்திவேலூரில் 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல், 3 பேர் கைது
பரமத்திவேலூரில் டேங்கர் லாரியில் கடத்திய 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், பரமத்திவேலூர் பகுதியில், வீரணம்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதிகாலை 3 மணிக்கு அவ்வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில், எவ்வித ஆவணமோ, லைசென்சோ இல்லாமல், சட்ட விரோதமாக, கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக பயோ டீசல் என்ற பெயரில் 12,00 லிட்டர் கலப்பட டீசலை டேங்கரில் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, லாரி டிரைவர் ஜெயசீலன், கிளீனர் குபேந்திரபாண்டியன், குப்புசாமி (எ) குணசேகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலைமறைவான கலப்பட டீசல் விற்பனையாளர், சென்னையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.