பரமத்திவேலூர் அருகே பணத்திற்காக தாயை தாக்கும் மகன், மருமகள்

பரமத்திவேலூர் அருகே பணத்திற்காக தாயை அடித்து உதைக்கும் மகன், மருமகள் வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2021-08-21 11:30 GMT

பரமத்தி அருகே பணத்திற்காக தனது தாயை அடித்து ரோட்டில் போட்டு இழுத்துச்செல்லும் மகன் சண்முகம்.

பரமத்திவேலூர் அருகே பணத்திற்காக தாயை அடித்து உதைக்கும் மகன், மருமகள் வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகில் உள்ள பொன்னேரிப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லம்மாள் (65), விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

இவரது கணவர் சின்னசாமி (74), கடந்த ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். மகள் கோமதி, மகன் சண்முகம் ஆகியோருக்கு திருமணமாகி விட்டது. மகன் சண்முகத்திற்கு அவரது தந்தை சின்னசாமி உயிரோடு இருக்கும் போதே 4 1/2 ஏக்கர் விவசாய நிலத்தை எழுதிக் கொடுத்து, ரூ.ஒரு லட்சம் ரொக்கப்பணம் வழங்கியுள்ளனர்.

கணவர் சின்னசாமி இறந்து விட்டதால் நல்லம்மாள் தனியாக வீட்டில் இருந்து கொண்டு 100 நாள் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். மேலும் நகைகளை விற்றப்பணம் ரூ.3 லட்சத்தை பேங்கில் போடுவதற்காக வீட்டில் வைத்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருக்கும் பணம் ரூ. 3 லட்சம் மற்றும் குடியிருக்கும் வீட்டினையும் தனக்கு வழங்க வேண்டும் என மகன் சண்முகம் தாய் நல்லம்மாளிடம் அடிக்கடி கேட்டு பிரச்சினை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை நல்லம்மாளை சந்தித்த சண்முகம், அவரது மனைவி ஜானகி ஆகியோர் வீடு மற்றும் ரொக்கப் பணம் ரூ.3 லட்சம் தரக்கோரி, நல்லம்மாளிடம் தகராறில் ஈடுப்பட்டனர்.

அப்போது, நல்லம்மாளின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த நல்லமாளை அங்குள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பதிரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பணத்திற்காக, பெற்ற தாயை ரோட்டில் வைத்து அடித்து தலை முடியை பிடித்து தரதரவென இழுத்துக் கொடுமை படுத்தும் மகன் மற்றும் மருமகளின் வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நல்லம்மாள் கூறுகையில், தான்வைத்திருக்கும் பணத்திற்காகவும் குடியிருக்கும் வீட்டினை தனது பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என தனது மகன் அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News