நாமக்கல் அருகே 100 நாள் வேலை கேட்டு மோகனூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நாமக்கல் அருகே 100 நாள் வேலை கேட்டு மேகானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2021-08-27 04:30 GMT

ஊரக வேலை வாய்ப்புத்திட்ட பணிகள் வழங்காததை கண்டித்து, கீழ பாலப்பட்டி கிராம மக்கள் மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோகனூர் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் பஞ்சாயத்து, கீழபாலப்பட்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் ஏராளமான பெண்கள் பணிசெய்து வந்தனர்.

கடந்த 6 மாதங்களாக அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதைக்கண்டித்தும், தங்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கக்கோரியும், கீழபாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பொதுமக்களுக்கு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் எங்கள் கிராமத்தில் மட்டும் பணிகள் வழங்கப்படவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் வேலை வழங்காவிட்டால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்கள். பின்னர் அவர்கள், மோகனூர் ஊராட்சி ஒன்றிய உதவி பிடிஓவிடம் தங்களின் கோரிக்கை மனுவை அளித்தனர்.

போராட்டம் குறித்து பிடிஓக்கள் முனியப்பன், தேன்மொழி ஆகியோர் கூறியதாவது:-

மோகனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரும் பணி தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு விவசாயிகள் தங்களது நிலங்களில் தென்னை மரங்கள் நடுதல் போன்ற விவசாய பணிகளுக்கு அணுகினால் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பணி வழங்கப்படும்.

மேலும் காவிரி கரையோர காப்புக்காடு பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட வனத்துறையின் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்த உடன் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். அப்போது அதிகமான பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர

Tags:    

Similar News