பரமத்தி அருகே பெண் போலீஸ் ஏட்டுவிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலி பறிப்பு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே டூ வீலரில் சென்ற பெண் போலீஸ் ஏட்டுவிடம், மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
கரூர் மாவட்டம், வேலாயு தம்பாளையம் சண்முகாந கரை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி மணி மேகலை (42). இவர் நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள குடிமைப்பொ ருள் கண்காணிப்பு அலுவலகத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காகதனதுமொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பரமத்தி அருகே மோட்டார்சைக்கிளில் மர்ம நபர்கள் மணிமேகலை சென்ற மொபட்டை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்ததும் மணிமேகலை கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் எடையுள்ள தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.
ஆனால் மணிமேகலை நகையை கெட்டியாக பிடித்து கொண்டதால், தங்க சங்கிலியின் பாதி பகுதியை மட்டும் மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இச்சம்பவத்தில் நிலை தடு மாறி கீழே விழுந்த மணிமேகலையை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண் போலீஸ் ஏட்டுவிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலை வீசிதேடி வருகின்றனர்.