மோகனூர் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்டங்கள்: எம்எல்ஏ ராமலிங்கம் ஆய்வு

மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆய்வு செய்தார்.;

Update: 2021-07-08 02:30 GMT

மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திட்டப்பணிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், புதியதாக தொடங்க உள்ள பணிகள் குறித்தும், பதிவேடுகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஒவ்வொரு பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். குமரிபாளையம் பஞ்சாயத்தில், பிரதமரின் கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ. 1 கோடியே 33 லட்சத்து75 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்ரோடு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

ஊராட்சி ஒன்றிய தலைவர் சரஸ்வதி, துணைத்தலைவர் பிரதாப், பிடிஓ முனியப்பன், முன்னாள் யூனியன் சேர்மன் நவலடி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் கைலாசம், ராஜாகண்ணன், குமரிபாளையம் பஞ்சாயத்து தலைவர் சுசிலா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் பிடிஓ தேன்மொழி நன்றி கூறினார்.

Tags:    

Similar News