பரமத்திவேலூரில் எம்எல்ஏ அலுவலகம்: முன்னாள் அமைச்சர் தங்கமணி திறப்பு

பரமத்தி வேலூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை, முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

Update: 2021-11-01 00:45 GMT

பரமத்திவேலூரில் எம்எல்ஏ அலுவலகத்தை,  முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். அருகில் எம்எல்ஏ சேகர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டசபை தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சேகர் வெற்றிபெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இதையொட்டி பரமத்திவேலூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகம் திறப்பு விழாவில்,  முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசியதாவது:

சட்டசபை தேர்தலின்போது, பல்வேறு பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துவிட்டது. இருந்தாலும் ப.வேலூர் சட்டசபை தொகுதியை பொறுத்தவரை,  அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கின்று. அதற்கு இந்த மக்கள் கூட்டமே சாட்சியாக இருக்கிறது. எனவே இந்த தொகுதி மக்கள் நலனில் அதிமுக தொண்டர்கள் அதிகம் அக்கறை செலுத்தி, மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். எம்எல்ஏ சேகர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News