பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை
பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையம் அருகே உள்ள பெருச்சாக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்தான் (70). கூலித் தொழிலாளி. இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் முத்தானை மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.