பொத்தனூரில் பெண்களுக்கான ஜவுளி உற்பத்தி நிறுவன துவக்க விழா

பொத்தனூரில் பெண்களுக்கான ஜவுளி உற்பத்தி நிறுவன துவக்க விழா நடைபெற்றது.;

Update: 2021-12-19 01:45 GMT

பொத்தனூரில் பெண்களுக்காக துவக்கப்பட்டுள்ள ரெடிமேடு ஜவுளி உற்பத்தி நிறுவனம்.

பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் இயங்கி வரும் வேர்டு தொண்டு நிறுவனத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த குருகிருபா பவுண்டேசன் உதவியுடன் பெண்களின் சுய வேலை வாய்ப்புக்காக ரெடிமேடு ஜவுளி உற்பத்தி நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழாவில், ராசிபுரம் ஜாவின் அப்பேரல்ஸ் அருண்குமார், தொழிலதிபர் கதிரவன், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை கவர்னர் திருவள்ளுவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். இந்த ரெடிமேட் உற்பத்தி நிறுவனம் மூலம், இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வேலை வாய்ப்பு பெற்று, பொருளாதார முன்னேற்றம் அடைவார்கள் என்று வேர்டு நிறுவன செயலாளர் சிவகாமவல்லி தெரிவித்தார். முன்னதாக, வேர்டுநிறுவன ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி வரவேற்றுப் பேசினார்.

Tags:    

Similar News