கபிலர்மலைப் பகுதியில் நாளை மின்சார விநியோகம் தடை

கபிலர்மலைப் பகுதியில் நாளை மின்சார விநியோகம் தடைபடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;

Update: 2021-07-26 04:13 GMT

இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளர் ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பரமத்திவேலூர் தாலுக்கா, கபிலர்மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால்,  நாளை 27ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும்.

இதனால் கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம்,சேளூர், செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையாம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News