நாமக்கல் அருகே கல்யாண சுப்ரமணியர் கோவில் திருக்கல்யாண உற்சவம்
நாமக்கல் அருகே கல்யாண சுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.;
திருக்கல்யாண அலங்காரத்தில் சுப்பிரமணியர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொன்மலர்பாளையம் சொக்கநாதபுரத்தில் பாலாம்பிகை உடனமர் வைத்தீஸ்வரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர் திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது.
அனைத்து சிவனடியார்கள் அருட்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், காலை 10.30 மணிக்கு மேல் 11.30 வரை அஸ்வினி நட்சத்திரத்தில் தேவார திருவாசகம் படிக்கப்பட்டு, தமிழ் முறைப்படி வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், கைலாய வாத்திய முழக்கத்துடன் மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் பொன்மலர்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.