பரமத்தியில் வட்டார சுகாதார பேரவை துவக்க விழா

நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் வட்டார சுகாதார பேரவை துவக்க விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

Update: 2022-08-16 13:00 GMT

பரமத்தியில்  வட்டார  சுகாதார பேரவை  துவக்க விழா நடைபெற்றது.

ஒவ்வொரு வட்டாரத்திலும், பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து, வட்டார சுகாதார பேரவை அமைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம்  பரமத்தி வட்டார சுகாதார பேரவை துவக்க விழா, அர்த்தனாரி பாளையத்தில் நடைபெற்றது. அட்மா சேர்மன் தனராசு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பரமத்தி டவுன் பஞ்சாயத்து சேர்மன் மணி, வேலூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி பேரவையை துவக்கி வைத்தனர். நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகலா வரவேற்றார். நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கி பேசினார்.

திருச்செங்கோடு நகர சுகாதார அலுவலர் டாக்டர் மணிவேல், சுகாதார பணிகள் உதவி திட்ட அலுவலர் டாக்டர் ரமேஷ், மாவட்ட சுகாதார பணிகள் பயிற்சி மருத்துவர் டாக்டர் விஜயராகவன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் 20 பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்கள், சமூக சேவை சங்கங்களின் பிரதிநிதிகள், வருவாய்த்துறை, கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். சுகாதாரத்தை வலியுறுத்தி கண்காட்சி நடைபெற்றது.

Tags:    

Similar News