பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோயிலில் கண்ணப்ப நாயனாருக்கு குருபூஜை விழா

பாண்டமங்கலத்தில் உள்ள புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் கண்ணப்ப நாயனாருக்கு குருபூஜை விழா நடைபெற்றது.;

Update: 2022-02-13 03:00 GMT

பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில், நடைபெற்ற குருபூஜை விழாவில், கண்ணப்ப நாயனாருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள, பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில், 63 நாயன்மார்களில் ஒருவரான, சிவனுக்கு கண் கொடுத்த கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா நடைபெற்றது.

குருபூஜையை முன்னிட்டு காசி விஸ்வநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், கண்ணப்ப நாயனாருக்கும் 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. குரு பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News