ப.வேலூர் ஏல மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2022-09-26 01:15 GMT

பைல் படம்.

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்து வருகின்றனர். இங்கு விளையும் பூக்களை பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். ப.வேலூர், பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் மூலம் கொள்முதல் செய்து செல்கின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.250-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.140-க்கும், முல்லைப் பூ ரூ.300- க்கும், செவ்வந்திப்பூ ரூ.50-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ150-க்கும், அரளி கிலோ ரூ.180-க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லைப் பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது. நவராத்திரி துவங்குவதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News