அக்னிபாத் திட்டத்தை குறைகூற திமுக அரசுக்கு தகுதியில்லை: பாஜக துணைத்தலைவர்

BJP News Today Live - மிககக் குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்களை நியமிக்கும் திமுக அரசுக்கு, அக்னி பாத் திட்டத்தை குறைகூற தகுதியில்லை என பாஜக மாநில துணைத்தலைவர் கூறினார்.

Update: 2022-06-27 03:15 GMT

பரமத்திவேலூரில் நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் பேசினார்.

BJP News Today Live - நாமக்கல் மாவட்ட பா.ஜ.க செயற்குழு கூட்டம் பரமத்திவேலூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பில் உயர் முன்னுரிமை கொடுத்து பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதமர் அறிவித்துள்ள அக்னிபாத் திட்டம் நமது நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு அடித்தளமிட்டுள்ளது. ராணுவத்தில் அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி பிரதமர் புதிய புரட்சியை படைத்துள்ளார். அக்னி வீரர்கள் பணிக்காலத்தை நிறைவு செய்தாலும், தொடர்ந்து ராணுவம் உள்ளிட்ட பிற துறைகளில் வேலை செய்யலாம். ஆனால், தி.மு.க அரசு, ஆசிரியர்களை மிக குறைந்த சம்பளத்தில் பணி அமர்த்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் திமுகவினர் அக்னிபாத் திட்டத்தை குறை கூறுவதற்கு தகுதியில்லை. குடியரசு தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவை நிறுத்தியதன் மூலம் பிரதமர் மோடி சமூகநீதி காவலர் என நிரூபித்துள்ளார் என்றார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News