பரமத்திவேலூர் அருகே கணவருடன் தகராறு: பெண் விஷம் குடித்து தற்கொலை

பரமத்திவேலூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-19 03:00 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்படுவூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (30). இவருடைய மனைவி கீதா (25). இவர்கள் இருவரும் குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜமீன்இளம்பள்ளியில் உள்ள தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு ரித்திகா (5) என்ற மகளும், பூவரசன் (4) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி அன்று குறும்பு செய்த தனது குழந்தைகளை கீதா கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது முருகன் மனைவியிடம் ஏன் குழந்தைகளை அடிக்கிறாய் என கேட்டுள்ளார். இதில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் சில நாட்கள் பேசாமல் இருந்துள்ளனர்.

இதில் மனமுடைந்த கீதா வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News