பரமத்திவேலூர் மார்க்கெட்டில் வெற்றிலை விலை சரிவு: விவசாயிகள் கவலை

பண்டிகை சீசன் முடிவடைந்துள்ளதால் பரமத்திவேலூர் மார்க்கெட்டில் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது.

Update: 2021-10-23 02:00 GMT

வெற்றிலை.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டாரத்தில் உள்ள பாண்டமங்கலம், நன்செய் இடையாறு, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் வெற்றிலை பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

பரமத்திவேலூரில் நடைபெறும் ஏலச்சந்தைக்கு விவசாயிகள் வெற்றிலையைக்கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். நேற்று நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 5,000-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ. 3,000-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ. 1,500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரு. 1,000-க்கும் ஏலம் போனது.

தற்போது பண்டிகை சீசன் முடிவடைந்துள்ளதாலும், விஷேச நிகழ்ச்சிகள் அதிகம் இல்லாததாலும் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

Tags:    

Similar News