மோகனூரில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி

மோகனூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.;

Update: 2022-02-28 09:45 GMT

மோகனூர் அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை, முன்னாள் அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் மேற்கு ஒன்றியம், எஸ்.வாழவந்தியில் அதிமுக சார்பில், தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் பிறந்த நாள் மற்றும் கட்சியின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாவட்ட அரசு வக்கீல் தனசேகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ருத்ராதேவி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொன்னுசாமி, கந்தசாமி, திருமலை, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிரிக்கெட் போட்டியில் கலந்து நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் கொண்டனர். மோகனூர் அருகே உள்ள பூண்டிபாளையம் அணியினர் முதலிடம் பெற்று ரூ.15 ஆயிரம் பரிசு பெற்றனர். எஸ் வாழவந்தி நண்பர்கள் குழு ஏ அணியினர் 2ம் இடம் பெற்று ரூ.12 ஆயிரம் பரிசு பெற்றனர். எஸ்.வாழவந்தி நண்பர்கள் குழு பி அணியினர் மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம், எல்லைக்காட்டுப்புதூர் அணியினர் 4ம் பரிசாக ரூ. 8 ஆயிரம் பெற்றனர்.

நிகழ்ச்சியில்,மோகனூர் சர்க்கரை ஆலை இயக்குனர் ராக்கியண்ணன், மோகனூர் நகர துணைச் செயலாளர் சிவஞானம், பொருளாளர் தாவீது, கவுதும், ஒன்றிய பிரதிநிதி பொன்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் எஸ்.வாழவந்தி கிளைச் செயலாளர் பரணிநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News