பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் ரூ.11.82 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை
பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் ரூ.11.82 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.
பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் ரூ.11.82 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் தேசிய எலக்ட்ரானிக் வேளாண் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 18,638 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.89.29க்கும், குறைந்தபட்சமாக ரூ.75.35க்கும், சராசரியாக ரூ.88.69க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.16,16,682 மதிப்பில் விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு விவசாயிகள் 14,429 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88.99க்கும், குறைந்தபட்சமாக ரூ.72.25க்கும், சராசரியாக ரூ.85.79க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11,82,455 மதிப்பில் விற்பனை நடைபெற்றது. தேங்காய் பருப்பின் விலை வீழ்ச்சி அடைந்ததால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.