பரமத்தி வேலூரில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்தி வேலூரில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டது.;
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள தேசிய மிண்ணனு வேளாண்மை மார்க்கெட்டில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு விவசாயிகள் மொத்தம் 28,333 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.91.20க்கும், குறைந்தபட்சமாக ரூ.76.35-க்கும், சராசரியாக ரூ.89.39க்கும் ஏலம் போனது.மொத்தம் ரூ.24,45,401 மதிப்பில் தேங்காய் பருப்பு ஏல விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 19,510 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.90.01க்கும், குறைந்தபட்சமாக ரூ.78.15க்கும், சராசரியாக ரூ.88.39க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.16,97,076க்கு விற்பனை நடைபெற்றது.