பரமத்தி வேலூர் மார்க்கெட்டில் ரூ.1.89 லட்சம் மதிப்பில் தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூர் மார்க்கெட்டில் ரூ.1.89 லட்சம் மதிப்பில் தேங்காய் ஏலம் விற்பனை நடைபெற்று உள்ளது.

Update: 2022-06-22 02:59 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் ரூ.1.89 லட்சம் மதிப்பில் தேங்காய் விற்பனை நடைபெற்றது.

பரமத்தி வேலூரில் தேசிய எலக்ட்ரானிக் வேளாண்மை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரம் தோறும் தேங்காய் மறைமுக ஏலம் டெண்டர் முறையில் நடைபெற்று வருகிறது. பரமத்திவேலூர், மோகனூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தேங்காய்களை இங்கு கொண்டு வந்த விற்பனைசெய்கின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7,335 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.24.91-க்கும், குறைந்தபட்சமாக ரூ.21.36-க்கும், சராசரியாக ரூ.23-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1,75,580-க்கு விற்பனை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7,772 கிலோ தேங்காய் வரத்து வந்தது. அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.85க்கும், குறைந்தபட்சமாக ரூ.22.10க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1,89,657-க்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

Tags:    

Similar News