பரமத்திவேலூர் ஒழங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்

பரமத்திவேலூர் ஒழங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.;

Update: 2022-03-31 10:15 GMT

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 3,094 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ25-க்கும், சராசரியாக ரூ.28-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.89,957 மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 380 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ22-க்கும், சராசரியாக ரூ.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1,27,126 மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றது.

Tags:    

Similar News