பரமத்தி வேலூர் அருகே மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் வாலிபர் மர்ம மரணம்

பரமத்திவேலூர் அருகே உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை.

Update: 2022-02-15 10:15 GMT

பைல் படம்.

பரமத்திவேலூர் அருகே வீரணம்பாளையத்தில் உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் தொழிலாளர்கள் மரவள்ளிகிழங்கு அறுவடை செய்து வந்தனர். அப்போது மரவள்ளி தோட்டத்திற்குள் வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக தொழிலாளர்கள் இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் பரமத்திவேலூர் பொன்னி நகரை சேர்ந்த முருகேசன் மகன் பாரதிராஜா (27) என தெரியவந்துள்ளது.

கேட்டரிங் படிப்பு முடித்துள்ள அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வந்த அவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று காலை திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிச் சென்றவர் மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News