பரமத்தி அருகே கார் மோதி விபத்து: டூ வீலரில் சென்ற கணவன், மனைவி சாவு
பரமத்தி அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்ற கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
பரமத்தி அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்ற கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கரையாம்பட்டி புதூரை சேர்ந்தவர் தங்கவேல் (48). அவரது அமுல்ராணி (43). அவர்கள் நாமக்கல் அருகே அக்கலாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தனர். இவர்களுடைய மகன் மணிகண்டன் பரமத்திவேலூர் அருகே பெரியகரசப்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் மகன் மணிகண்டனை பார்ப்பதற்காக டூ வீலரில் பெரியகரசப்பாளையத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு மகனை பார்த்து விட்டு அக்கலாம்பட்டிக்கு டூ வீலரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். பரமத்தி- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில், கந்தம்பாளையம் அருகே சென்றபோது, பெங்களூரில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டின் நடுவில் இருந்த சாலைத்தடுப்பை தாண்டி, எதிர் திசையில் தங்கவேல் ஓட்டிவந்த டூ வீலர் மீது மோதியது.
இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்னர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள், 2 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் அமுல்ராணி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தங்கவேலு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பெங்களூர்ராஜாஜி நகரை சேர்ந்த மகேஷ் (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.