பரமத்திவேலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2021-06-15 09:21 GMT

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர்,  சோழசிராமணி அருகே உள்ள பச்சாக்கவுண்டன்வலசு, காரைக்களம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சுரேஷ் (18), கூலித்தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் மணிகண்டன் (30) என்பவரும் பச்சாக்கவுண்டன்வலசு பகுதியில் இருந்து திருச்செங்கோடு அருகே சித்தளந்தூருக்கு காரில் சென்றனர்.

அப்போது, ஒரு திருப்பத்தில் நிலை தடுமாறிய கார், சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுரேஷ் படுகாயமடைந்தார். திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News