பரமத்திவேலூர் அருகே கார் விபத்தில் விவசாயி உயிரிழப்பு

பரமத்தவேலூர் அருகே கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2021-11-15 14:45 GMT
பரமத்திவேலூர் அருகே கார் விபத்தில் விவசாயி உயிரிழப்பு
  • whatsapp icon

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா, கந்தம்பாளையம் அருகே உள்ள மாதேசம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (70), விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது டூ வீலரில் வசந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே தார்சாலையை கடக்க முயன்றார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று ரங்கசாமி ஓட்டி சென்ற டூவீலர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த அவர்,  உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு,  திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News