ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ப.வேலூர் மகா மாரியம்மனுக்கு வளையல் அலங்காரம்
Bangles Decoration For Goddess -ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு ப.வேலூர் மாரியம்மனுக்கு 25 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.;
Bangles Decoration For Goddess - பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களால் வழங்கப்பட்ட 25 ஆயிரம் வளையல்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ப.வேலூர் பேட்டையில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அன்ன காமாட்சி அலங்காரத்தில் பகவதியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவை முன்னிட்டு பகவதியம்மனுக்கு பாலாபிஷேகமும், மாலையில் விளக்கு பூஜையும் நடைபெற்றது.
நன்செய் இடையாறு மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. ப.வேலூர் வட்டாரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களிலும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2