பரமத்திவேலூர் அருகே ஆட்டோ மோதி விவசாயி பலி
பரமத்தி வேலூர் அருகே சரக்கு ஆட்டோ மோதியதில் டூ வீலரில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா, நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ள தொட்டியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (75) விவசாயி. இவர் சம்பவத்தன்று காலை தனது டூ வீலரில், கந்தம்பாளையத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். முசல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு நோக்கிச் சென்ற சரக்கு ஆட்டோ ஒன்று ராதாகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் (21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.