பரமத்திவேலூர் அருகே அசாம் ஏஜென்ட் கொலை - சட்டீஸ்கரை சேர்ந்தவர் கைது

பரமத்தி வேலூர் அருகே, தொழில் போட்டியில், அசாம் மாநிலத்தை சேர்ந்த ஏஜென்டை கொலை செய்தாக, சட்டீஸ்கரை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-10 09:38 GMT

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள, எஸ்.வாழவந்தி, கே.புதுப்பாளையத்தில் பாலகிருஷ்ணன் என்பவரது சோளக்காட்டில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று, அழுகிய நிலையில் கிடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, கொலை செய்யப்பட்டவர் அசாம் மாநிலம், காலக்கோவா பகுதியைச் சேர்ந்த சிம்புசாகர் (26) என்பது தெரியவந்தது. இவர் அசாம் மாநிலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு, தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பும் ஏஜெண்ட் ஆக இருந்து வந்தது தெரியவந்தது.

சிம்புசாகாரை கொலை செய்தது யார் என்பது குறித்து பரமத்தி வேலூர் டிஎஸ்பி ராஜாரணவீரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சந்தேகத்தின் பேரில், சட்டீஸ்கர் மாநிலம் கொண்டக்காவு பகுதியைச் சேர்ந்த, ஏஜென்ட் ராஜ்மோல் (21) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இதில், ராஜ்மோல் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சம்லு ஆகிய இருவரும் சேர்ந்து, தொழில் போட்டி காரணமாக சிம்புசாகரை கொலை செய்து, உடலை சோளக்காட்டில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து, ராஜ்மோலை கைது செய்த போலீசார், தலைமைறைவான சம்லுவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News