தமிழக அரசைக் கண்டித்து ப.வேலூரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசைக் கண்டித்து பரமத்தி வேலூரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அளிக்காத தமிழக அரசைக் கண்டித்து பரமத்திவேலூர் அண்ணா சிலை அருகில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு எம்எல்ஏசேகர் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பொன்னிவேலு உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.