பரமத்தி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அ.தி.மு.க. முற்றுகைப் போராட்டம்

பரமத்தி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அ.தி.மு.க. வினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.;

Update: 2022-05-18 02:17 GMT

பரமத்தி டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன் அ.தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி டவுன் பஞ்சாயத்து சார்பில், நாமக்கல் செல்லும் ரோட்டில், முறையாக ஏல அறிவிப்பு செய்யாமல், குறிப்பிட்ட கான்ட்ராக்டர் மூலம் கடைகள் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பரமத்தி நகர அ.தி.மு.க செயலாளர் சுகுமார் தலைமையில், இணை செயலாளர்கள் மாலதி, கலைமணி, பொருளாளர் அனீபா ஆகியோர் முன்னிலையில், அ.தி.மு.கவினர் பரமத்தி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் டவுன் பஞ்சாயத்து தலைவர் மணி, செயல் அலுவலர் செல்வக்குமார் ஆகியோரிடம், முறையாக ஏல அறிவிப்பு வெளியிட்டு கடைகள் கட்டப்பட வேண்டும் என்று கூறி கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்று கொண்ட தலைவர், செயல் அலுவலர் ஆகியோர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அ.தி.மு.கவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் சகுந்தலா, காந்திமதி ராமன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், நகர துணை செயலாளர் ரமீஜாபானு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News